×

ஆன்லைனில் இழந்த ₹1.51 லட்சம் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு வேலூர் சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை 4 பேருக்கு போலி லிங்க் அனுப்பி மோசடி

வேலூர், மே 1: வேலூர் மாவட்டத்தில் ஆன்லைனில் பணத்தை இழந்த 4 பேரின் ₹1 லட்சத்து 51 ஆயிரத்தை மீட்டு சைபர் கிரைம் போலீசார் ஒப்படைத்தனர். வேலூர் அடுத்த பெரிய சித்தேரியை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் விஜியகுமார், இவரது செல்போனுக்கு சில நாட்களுக்கு முன்பு வந்த ₹10க்கு ரீசார்ஜ் செய்யும் ேபாலியான லிங்க் மூலம் தனது விவரங்களை அனுப்பி வைத்துள்ளார். அதன் மூலம் சைபர் கிரைம் கும்பலிடம் ₹25 ஆயிரத்தை இழந்தார். அதேபோல், பள்ளிகொண்டாவை சேர்ந்த இளவரசன் என்பவரது வங்கி கணக்கில் அவருக்கே தெரியாமல் ₹18 ஆயிரத்தை மர்ம நபர்கள் எடுத்துள்ளனர். மேலும் சென்னையில் சிமென்ட் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் வேலூரை சேர்ந்த முகமது தவுபீக் என்பவர், அவரது கிரெடிட் கார்டு லிமிட்டை அதிகப்படுத்தி தருவதாக வந்த அழைப்பை நம்பி ₹38 ஆயிரத்தை செலுத்தி ஏமாந்துள்ளார். மேலும் குஜராத்தில் இருந்து தேர்தல் பணிக்காக வந்த சிஐஎஸ்எப் வீரர் சுஷாந்த்நாயக் என்பவர் போலியான ஆன்லைன் லிங்க் மூலம் அவரது கிரெடிட் கார்டில் இருந்து ₹70 ஆயிரத்தை இழந்துள்ளார். இதுதொடர்பான புகார்களின் மீது வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட 4 பேர் இழந்த மொத்த பணம் ₹1 லட்சத்து 51 ஆயிரத்தை மீட்டு எஸ்பி மணிவண்ணன் முன்னிலையில், அவர்களிடம் ஒப்படைத்தனர். அப்போது சைபர் கிரைம் பிரிவு ஏடிஎஸ்பி கோட்டீஸ்வரன், இன்ஸ்பெக்டர் புனிதா, எஸ்ஐ சதீஷ்குமார், ஏட்டு மாலதி ஆகியோர் உடனிருந்தனர்.

The post ஆன்லைனில் இழந்த ₹1.51 லட்சம் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு வேலூர் சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை 4 பேருக்கு போலி லிங்க் அனுப்பி மோசடி appeared first on Dinakaran.

Tags : Vellore ,Vellore district ,Vijiyakumar ,Chitheri ,
× RELATED வேலூர் மாவட்டத்தில் சீல் இன்றி...